செய்திகள்

யுத்தக் குற்ற விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும்..!

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

யுத்த நிறைவு தினத்தை முன்னிட்டு கடந்த 18 ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது, அரச படையினரால் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் இதுவரை தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வாகனேரி ஜப்பார் திடல் மக்கள்

admin

யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நினைவேந்தல்!

Tharani

பண்டிகை காலத்தில் அதீத கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்

reka sivalingam