சினிமா செய்திகள்

ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகியை விட கதாநாயகியின் சகோதரி அல்லது தோழி போன்ற கதாபாத்திரங்களில் சற்று சுமாரான தோற்றம் கொண்ட பெண்களை தேர்வு செய்வார்கள்.

கதாநாயகிக்கு இணையான அல்லது ஓரளவு அழகான தோற்றத்தில் உள்ள பெண்களை தேர்வு செய்வது என்பது அரிதாக நடக்கும்.

அப்படி தோழி, சகோதரி, இரண்டாம் கதாநாயகி, மூன்றாம் கதாநாயகி அல்லது சிறிய கதாபாத்திர நடிகை, துணை நடிகைகள் போன்றவர்கள் படத்தின் கதாநாயகியைவிட ரசிகர்களை அதிகம் ஈர்த்து விடுவார்கள்.

இப்படி ரசிகர்களை ஈர்த்த நடிகைகள் சிலர் பற்றி பார்த்தோமானால்,

  • கவ்யா ஷெட்டி

இவர் இது என்ன மாயம் (2015) என்ற படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவை விரட்டி விரட்டி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார். உடை, மேக்கப் எல்லாம் குறைசொல்ல ஏதும் இல்லாமல் காதல் காட்சிகளில் அசத்தியிருப்பார். ஆனால் கதாநாயகன் விக்ரம் பிரபு படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷை காதலிப்பார்.

படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ரசிகர்கள் ஏன்டா இவ நல்லா தானே இருக்கா! ஹீரோயினை விட இவளுக்கு என்ன குறை என்று நினைக்கத் தோன்றும்.

  • மாளவிகா

ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் மனிஷா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் தோழியாகவும், நாயகனின் தோழியாகவும் வருவார். இவர் ஆத்மிகாவைவிட அந்த படத்தில் நல்ல அழகாவும், உயரமாகவும், குறும்பாகவும் இருப்பார். சிறிய முகபாவனைகள் கூட நன்றாக வெளிப்படுத்திருப்பார்.

கதாநாயகன் ஆதி இவரை கழட்டிவிட்டு இறுதியில் ஆத்மிகாவை கரம்பிடிப்பார்.

  • பூர்த்தி பிரவின்

இவர் தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர். பல முன்னணி நாயகன், நாயகிகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவர் தனுஷ் நடித்த தங்க மகன் படத்தில் எமி ஜாக்சனுக்கு தோழியாக வருவார்.

படத்தில் பெரிதாக வசனங்கள் இருக்காது. பல காட்சிகளில் அழகா வந்து போவார்.

  • அதிதி போஹங்கர்

இவர் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நான்காம் கதாநாயகியாக நடித்திருப்பார். மற்ற கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கசாண்ட்ரா, ப்ரணிதா சுபாஷ் இவர்களை விட இவர் சினிமாத்தனமாக இல்லாமல் ஊர் பெண் போல் இருப்பார். அந்த படத்தில் மற்ற கதாநாயகிகளை விட நன்றாக இருந்தார்.

Related posts

இன்றைய நாள் ராசி பலன்கள் (11/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

அப்பளமாகிய முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்!

G. Pragas

திருமலையில் 16 வயது சிறுமி தற்கொலை!

Tharani