செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

ரஜனி திரனகமவின் நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற் கூற்றியல் துறைத் தலைவரும் முறிந்த பனை புத்தகத்தின் சக ஆசரியருமான ராஜினி திரனகமவின் 30வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணம் – ரிம்மர் மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்றது.

ராஜினி திரனகமவின் உறவினர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் ராஜினியின் நினைவுப் பேருரையை கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் பர்ஷானா ஹனிபா ஆற்றியிருந்தார். மேலும் நிகழ்வில் அவருடைய நண்பர்களும் உரையாற்றியதுடன் பாடல்களும் இசைக்கப்பட்டது. இதில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.

ராஜினி திரனகமவை யாழ் பல்கலைகழகத்திற்கு அருகில் இனம்தெரியாத சிலர் சுட்டுக் கொன்றிருந்தனர். அந்த கொலையை யார் நடத்தியது என்பதில் இன்னமும் தெளிவற்ற நிலையிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தாவிற்கு வியாழேந்திரன் ஆதரவு!

G. Pragas

சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது – சம்பந்தன்

G. Pragas

இலத்திரனியல் திரையின்றி பேச கோத்தாவுக்கு அச்சம்

G. Pragas

Leave a Comment