இந்திய செய்திகள் செய்திகள்

ரஜினியின் கொரோனா வீடியோவை நீக்கியது டுவிட்டர்!

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டிருந்த வீடியோவை டுவிட்டர் சமூக வலைத்தளம் நீக்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று(21) கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை கொரோனா பரவலைத் தடுத்துவிடலாம்” என்பது உள்ளிட்ட சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ அவரது டுவிட்டர், யூடியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி டுவிட்டர் அந்த பதிவை சிறிது நேரத்திற்கு முன்பாக நீக்கியுள்ளது.

இருந்தபோதும், அந்த வீடியோ யூடியூபில் பார்க்கக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘உயிரியல் ஆயுதங்கள்’ சாசனக் கூட்டத்திற்கான தலைமை இலங்கைக்கு

Tharani

கொடிகாமம் தெற்கில் 13 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன

G. Pragas

மிரிஹான தடுப்பு முகாமில் பெருமளவு கைபேசிகள் கைப்பற்றல்

G. Pragas