செய்திகள் பிரதான செய்தி

ரஞ்சனின் குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்தவில்லை – பொலிஸ்

ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் தொலைபேசி உரையாடல்களில் அடங்கியுள்ள குரல் பதிவுகள் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பொலிஸார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸாரிடமுள்ள குரல் பதிவுகள் வேறு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை. அவை ரஞ்சன் ராமநாயக்கவின் கைவிரல் அடையாளத்துடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்களில் அடங்கியுள்ள குரல் பதிவுகள் தொடர்பிலான பொறுப்பு, நீண்ட காலமாக அதனை வைத்திருப்பவர்களுக்கே உரியது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உடுதும்பர பிரதேசத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

reka sivalingam

சமூக இடை வெளியுடன் செயற்படுங்கள் – மகேசன்

Tharani

அரச பேருந்து சபையினர் பணிப் பகிஸ்கரிப்பு!

Tharani