in ,

ரஞ்சன் விவகாரத்தால் அதிர்ந்த நாடாளுமன்றம்; ஆசனம் தொடர்பில் 3 வாரத்தில் அறிவிப்பு!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி தொடர்பில் ஆராய்ந்து 3 வாரங்களின் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன இன்று (19) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

தண்டனை தீர்ப்பின் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க எம்.பியாக இருக்க முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்த விடயம் மற்றும் இன்று ரஞ்சனை நாடாளுமன்றுக்கு அழைத்து வராதமை தொடர்பிலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் காரசாரமான விவாதத்தை செய்த நிலையில் சபாநாயகரால் தீர்மானம் அறிவிக்க அவகாசம் கோரப்பட்டது.

இதன்போது ரஞ்சனுக்கு ஆதரவாக விவாதித்த உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களும், கொலைகாரர்களும், கொள்ளையர்களும் ரஞ்சன் ராமநாயக்கவை சமூக விரோதி என கூறுவதாக எதிரணி குற்றம்சாட்டியது.

நீதிமன்ற தீர்ப்பளித்த போது கூட நீதிமன்றுக்கு விரல் நீட்டி உள்ளே இருப்பவர்கள் கள்ளர் என்று கூறிய ரஞ்சனை நாடாளுமன்றுக்கு அழைத்து வருவதாக என்று ஆளும்கட்சி சீறிபாய்ந்தது.

இதேவேளை, ஐசிசிபிஆர் நியதிச் சட்டத்தின் கோட்பாடுகளை நாம் ஏற்றுள்ளோம். அதாவது எந்தவொரு குற்றவியல் விடயத்திலும், அதற்கு ஒரு மேன்முறையீடும் இருக்க வேண்டும். அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை எந்தவொரு குற்றவியல் விடயத்திலும் ஒரு மேன் முறையீடு இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் ஏற்றுள்ளது. எனவே அது உயர் நீதிமன்றில் ஆதரித்து பேசப்பட வேண்டும். இதனை சபாநாயகர் கவனத்தில் கொள்ள வேண்டுமென எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

மட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு!

4 தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சு! – கெஹெலிய