in ,

ரஞ்சன் விவகாரம் – களேபரமான நாடாளுமன்றம்!

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பாக நாடாளுமன்றில் ஆளும் – எதிர் கட்சி இடையே இன்று (8) ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வு சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சனின் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் சஜித் – தினேஷ், பொன்சேக – சமல் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இதனால் ஐந்து நிமிடங்கள் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்பட்டு, பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய அமர்வில் ரஞ்சனின் பதவி தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து சபைக்குள் பிரசன்னமாகியிருந்தனர்.

தீவிரவாத வகுப்பு நடத்தியதாக ரிஐடியால் இருவர் கைது!

திருநாவற்குளம் வாள் வெட்டு – இருவர் கைது!