செய்திகள் பிரதான செய்தி

ரணிலா? சஜித்தா? வாக்கெடுப்பை கோருகிறார் சுஜீவ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக ​வேண்டுமென்றால் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் அமைச்சர் சஜித்தே வெற்றிபெருவார் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

பிரதமர் ரணிலுடன் நீண்ட நாள்கள் பணியாற்றியிருக்கோம். அவரை ஒருபோதும் கைவிட்டதில்லை. காலை பிடித்துக் கேட்கிறேன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குங்கள். ஐ.தே.கவின் எதிர்காலம் உங்களின் கரங்களில் இருக்கிறது. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளிக்கும் ஊடகப்பேய்கள் ஐ.தே.கவை பிளவுப்படுத்த போலியான செய்திகளை வௌியிட்டு வருகின்றன. சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க களமிறக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்க வேண்டுமானால், அதனை அறிவித்து, கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தீர்மானிக்க வெண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் சஜித்தே வெற்றிபெறுவார். அமைச்சர் சஜித் ஜனாதிபதியாக இதுவே சிறந்த தருணம். சிங்கப்பூருக்கு இணையான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அவரால் முடியும். சஜித் ஜனாதிபதியாவார். அவரது ஆட்சியில் எந்தவொரு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஊழல் ​மோசடிகளில் ஈடுபட இடமளிக்கமாட்டார். – என்றார்.

Related posts

தமிழர்களுக்கு கோத்தாவினால் மட்டுமே தீர்வு தர முடியும் – அங்கஜன்

G. Pragas

பங்களாதேஷ் கடற்படை கப்பல் கொழும்பை வந்தடைந்தது

reka sivalingam

பெண்கள் உரிமைக்கான போராட்டத்துக்கு அழைப்பு!

G. Pragas