உலகச் செய்திகள் செய்திகள்

ரயிலில் சிலின்டர் வெடித்து 73 பேர் பலி!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலின்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியது. பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related posts

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று முதல் வழமைக்கு

G. Pragas

சிறுமி மீது துஷ்பிரயோகம் – 20 வயதுச் சந்தேக நபர் கைது!

G. Pragas

அடம்ஸ் – விஜயகலா சந்திப்பு!

G. Pragas

Leave a Comment