செய்திகள் பிராதான செய்தி

ரயில் தடம்புரண்டது; 250 பயணிகளும் தப்பினர்

திருகோணமலை – மட்டக்களப்பு ரயில்ப் பாதையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மேனகாய இரவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவுக்கன – கலவேவ பகுதியில் தடம்புரண்டதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து சரிந்ததுடன் மரத்திலாலான சிலிப்பர் கட்டைகள் என்பன உடைந்து சேதடைந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று (21) இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை ரயில் இன்ஜின் அங்கிருந்த பாலத்தை கடந்து செல்ல முன்னர் விபத்து ஏற்பட்டதால் தெய்வாதீனமாக பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது தவிர்க்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து சரிந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது ரயிலில் 250 பயணிகள் இருந்ததாக பொலிலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மட்டக்களப்பில் கோத்தாவிற்கு 101 பிரச்சார நிலையங்கள்

G. Pragas

சஜித்துக்காக வவுனியாவில் வெடி வெடித்து ஆரவாரம்!

G. Pragas

வித்தியா கல்வி நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆசிரியர் நாள் நிகழ்வு

G. Pragas

Leave a Comment