செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

ரயில் மோதிய விபத்தினால் தீர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – அன்னசத்திர வீதியில் நேற்று (13) காலை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பான கடவை அமைத்துதருமாறு அப்பகுதி மக்கள் இணைந்து ரயில் தண்டவாளத்துக்கு குறுக்கே மறியலை ஏற்படுத்தி போராட்டம் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் இங்கு சமிக்ஞை விளக்கு, ரயில்வே கேட் அமைத்து தருமாறு பலமுறை ரயில்வே திணைக்களத்திடம் கோரிய போதும் இதுவரை இங்கு அமைக்கப்படவில்லை என மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.

இதன்போது யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் சமரசம் பேசி தாம் இங்கு பாாதுகாப்பு கடவையாக சமிக்ஞை விளக்கு அமைத்துத்தர சம்மதிப்பதாகவும் சமரசம் செய்தனர்.

அத்துடன் அங்கு வந்த ரயில்வே காட் இருவர் கொழும்பில் ரயில்வே திணைக்கள உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் பேசி குறித்த பகுதியில் சமிக்ஞை விளக்கு அமைப்பது பற்றி பொலிஸாருடன் பேசினார். அதன்படி சமிக்ஞை விளக்கு, கேட் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாவும் சில வாரங்களில் அமைக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தாம் இங்கு இருவரை ரயில்வே கடவை காப்பாளர்களை நியமிப்பதாக தெரிவித்து அங்கு நின்ற மக்களுக்கு உறுதியளித்து சமரசப்படுத்தினார்.

இதையடுத்து தண்டவாளத்தில் குறுக்கே போடப்பட்ட தடையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றி, கலைந்து சென்றனர்.

Related posts

யாழ் நகரை சுத்தம் செய்கின்றனர் பொலிஸார்

கதிர்

அணி மாறுகிறார் அஸ்வின்

G. Pragas

விஜய் ’64’ இல் நாசர்

Bavan

Leave a Comment