செய்திகள் தலையங்கம் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சசிகலா திட்டமிட்டு தோற்கடிப்பு? ரவிராஜின் உருவச்சிலை கறுப்பு துணியால் மூடப்பட்டது!

நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது காணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலையின் முகப்பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது விருப்பு வாக்கு எண்ணிக்கையில தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார். மோசடி செய்யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களிலும் குற்றசாட்டுகள் எழுந்திருந்தது.

இந்நிலையிலையே இன்றைய தினம் (07) காலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாமனிதர் ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியினால் மூடப்பட்டு உள்ளதுடன், கைகள் மற்றும் கால்கள் சிவப்பு மஞ்சள் துணியினால் கட்டப்பட்டு உள்ளன.

இதேவேளை தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் சசிகலா ரவிராஜ் முறையிட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலையில் தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

reka sivalingam

தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றினால் அரசே பொறுப்பு!

G. Pragas

தமிழர்களை ஒருபோதும் ஒதுக்க மாடடோம்!

Tharani