செய்திகள் பிரதான செய்தி

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரிடம் விசாரணை!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில் பல்வெறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மிக்ரக விமான கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உதயங்க வீரதுங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழர்கள் விளையாட்டுக்காக ஆயுதம் ஏந்தவில்லை – சுமனுக்கு ஸ்ரீநேசன் பதிலடி

G. Pragas

வரலாற்றில் இன்று – (29.01.2020)

Tharani

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்; நால்வர் கைது!

G. Pragas