in ,

ராஜபக்சக்களை விரட்டியடித்து புதுயுகம் விரைவில் மலரும் என்கிறார் சஜித்!

“ ராஜபக்சக்களின் ஆட்சியில் நாடு இருண்ட யுகத்துக்குள் வீழ்ந்துவிட்டது. மக்கள் தமது நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்லவே முடியாதளவுக்கு சுமைகள் அதிகரித்துவிட்டன. இலங்கை வரலாற்றிலேயே மக்களால் மிகமோசமாக வெறுக்கப்பட்ட அரசாங்கமாக இப்போதைய அரசாங்கம் மாறிவிட்டது. ராஜபக்சங்களை ஆட்சியில் அமர்த்திய அதே மக்களே இன்று அவர்களை விரட்டியடிக்கவேண்டுமெனத் துடிக்கின்றனர். இத்தகைய நிலையில் இருந்து விரைவில் நாட்டை மீட்டெடுத்து, புதிய யுகம் நோக்கி பயணிக்க வைக்க, ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும். அதற்கு மக்கள் எம்மோடு ஒன்றிணையவேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வருகின்றார்.
இந்தநிலையில், கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் அகிலதாஸின் ஏற்பாட்டில் கரவெட்டியில் தைப்பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாது மக்களின் சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்தி வருகின்றது.
குறிப்பாக நாடு முழுவதிலுமுள்ள பின்தங்கிய மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் பாடசாலைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம்.

இவ்வாறான சேவைகளை வழங்குவதையிட்டு பெருமையடைகின்றேன். ஏனென்றால், எந்தவோர் எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. குறிப்பாக எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். நாங்கள் ஒரு புதிய கட்சி. ஆனால், நாங்கள் புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்கிறோம்.

பொங்கல் வியாபாரம் மந்தம்!

கடற்படைப் படகு மோதி மீனவர் உயிரிழப்பு!