செய்திகள் பிரதான செய்தி

ராஜிதவுக்கு மறியல்; இளம் குற்றவாளிள் சீர்திருத்த சிறையில் அடைப்பு!

இன்று (13) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிஐடி) சரணடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ராஜித சேனாரத்னவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அந்தவகையில் எதிர்வரும் 27ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுருந்தார்.

இதனையடுத்து கொரோனா சூழ்நிலையை கருதி சற்றுமுன் நீர்கொழும்பு – பல்லன்சேன, தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்தில் ராஜித சேனாரத்ன அடைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைவான் ஊடக சந்திப்பு வழக்கின் பிணை உத்தரவு இரத்தாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சீனாவில் இதுவரை 811 பேர் பலி!

G. Pragas

யாழ் பல்கலை துணைவேந்தராக இராணுவ அதிகாரியா? மறுக்கிறது மானியங்கள் ஆணைக்குழு

G. Pragas

வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு!

G. Pragas