in ,

ராயஸ்தானுக்கு தடைக்கல்லாக நின்ற படிக்கல்; விக்கெட்களை இழக்காமல் வென்றது பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் இன்று (22) ராயஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட்களினால் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் ஆடிய ராயஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிவம் டூபே (46), ராகுல் தேவதியா (40) ஓட்டங்களை பெற, பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் (27/3), ஹர்ஷல் படேல் (47/3) விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் 16.3 ஓவர்களில் எந்தவிதமான விக்கெட்களையும் இழக்காமல் 181 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றி கொண்டது.

துடுப்பாட்டத்தில் தேவதத் படிக்கல் (101*), விராட் கோஹ்லி (72*) ஓட்டங்களை பெற, பந்துவீச்சில் சோபிக்கவில்லை.

இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்படும் – கோத்தாபய!

புதிதாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறக்கப்பட்டது!