செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

‘ரிக்ரொக்’ செயலிக்கு அடிமை: உளவள சிகிச்சையில் யாழில் 10 சிறுமிகள்

‘ரிக்­ரொக்’ செய­லிக்கு அடி­மை­யாகி, அதன்­மூ­லம் காதல்­வ­யப்­பட்ட 10 சிறு­மி­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­ வ­ம­னை­யின் உள­வ­ளச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

அதீத அலை­பே­சிப் பாவ­னை­யின் கார­ண­மாக, இந்த வரு­டம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் 16 சிறு­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் உள­வள சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­க­ளில் 10 பேர் சிறு­மி­கள். இவர்­கள் ‘ரிக்­ரொக்’ செய­லி­யைப் பயன்­ப­டுத்தி ஸ்ரீ காலப்­போக்­கில் அதற்கு அடி­மை­யாகி, பின் அதன்­மூ­லம் காதல் வயப்­பட்டு ஸ்ரீஉ­ள­ந­லம் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதர 6 சிறு­வர்­கள், நாளின் கணி­ச­மான பகு­தியை அலை­பே­சிக்­குள் தொலைத்­துக் கொண்­ட­வர்­கள். அலை­பே­சிப் பயன்­பாட்­டில் இருந்து மீள­மு­டி­யாத நிலை­யில் அவர்­கள் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதீத அலை­பே­சிப் பாவனை தொடர்­பில் மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் போதைப் பொருள் பாவனை அதி­க­ரித்து வரு­கின்ற அதே­நே­ரம் தொலை­பே­சிப் பாவ­னை­யும் அதன் ஆபத்­துக்­க­ளும் மறு­பு­றம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக மாண­வர்­க­ளை­யும் சிறு­வர்­க­ளை­யும் விழுங்கி வரு­கின்­றது. அலை­பே­சிப் பாவ­னை­யால் சிகிச்சை பெறும் 16 பேர் இந்த வரு­டத்­தில் மட்­டும் சிகிச்சை பெறு­ப­வர்­களே.

அத்­து­டன் இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தாமாக முன்­வந்து சிகிச்சை பெறு­ப­வர்­கள் மிக­மி­கக் குறைவே. எனவே அலை­பே­சிப் பாவ­னை­யால் தம் உள­ந­லத்­தைத் தொலைத்த மாண­வர்­கள் சமூ­கத்­தில் இன்­னும் பல மடங்கு இருக்­க­லாம். பெற்­றோர் தமது பிள்­ளை­க­ளின் அலை­பே­சிப் பாவனை தொடர்­பில் உச்­ச­பட்­சக் கவ­னத்­து­டன் இருக்­க­வேண்­டும் – என்­ற­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282