செய்திகள் பிரதான செய்தி

ரிஷாட், ஹக்கீம் கட்சிகளை வெளியேற்ற தயாரானது சஜித்தணி!

ரவூப் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமது கூட்டணியிலிருந்தும வெளியேற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று (23) மாலை அனைத்து கட்சி மாநாட்டை நடத்தி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளின் 6 உறுப்பினர்கள் இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர். இதனையடுத்தே அக்கட்சிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகல் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (22) அரசுக்கு ஆதரவளித்த பதுளை எம்பி அரவிந்த்குமாரை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

Related posts

தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த

G. Pragas

கொரோனாவின் உலக பலியெடுப்பு 619,467 ஆனது!

G. Pragas

கொரோனா சாவு; 88 ஆயிரம் ஆனது!

G. Pragas