செய்திகள் விளையாட்டு

ரி-10 தொடரில் 7 இலங்கை வீரர்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெறவுள்ள மூன்றாவது ரி-10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள் விளையாடவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ரி-10 லீக் தொடரானது அபுதாபியில் எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, டசுன் ஷானக மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசார பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

மாணவர்களுக்கு காப்புறுதி தொடர்ந்தும் அமுலில்!

Tharani

பாடசாலைகள் ஆரம்பமாக முன்னர் டெங்கு ஒழிப்பு

Tharani

போதையில் சூடு – ஐவர் ரிஐடி வசம்; இராணுவ கப்டன் இடமாற்றம்!

G. Pragas