செய்திகள் பிரதான செய்தி

ரீட் மனு மீதான விசாரணை இன்று

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை இன்று (13) இடம்பெறவுள்ளது.

மூன்று பேர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, குறித்த மனு மேலதிக விசாரணைகளுக்காக இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தங்களை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நீக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாகதம்பிரான் ஆலய தர்மகர்த்தாவின் வேண்டுகோள்!

Bavan

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு மோனலிசா ஓவியம் ஏலம்!

Tharani

தம்பதியினர் படுகொலை!

G. Pragas