in

ரூ.5000; இரட்டிப்பாக பெறும் வாய்ப்பு

கொவிட் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கையானது இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 30 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையோர்கள் விபரம் வருமாறு:

நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள், நாள்பட்ட நோயாளர்கள், மாற்றுத்திரனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறும் அனைவரும் மேற்படி 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெறலாம்.

அத்துடன் ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டில் குழந்தை பிரசவிப்பு; கொலை செய்த பெற்றோர் கைது!

கடலுக்குள் மூழ்கும் ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல்