செய்திகள் விளையாட்டு

ரேஞ்சர்ஸ் சம்பியன் லீக்கில் வளர்பிறை சம்பியன்!

ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய இருபது ஓவர்களைக் கொண்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இருபது அணிகள் பங்குபற்றிய ரேஞ்சர்ஸ் சம்பியன் லீக் (RCL) தொடரில் இறுதிப் போட்டிக்கு ரேஞ்சர்ஸ் அணியினரும், ஓட்டமாவடி வளர்பிறை அணியினரும் தெரிவாகி போட்டியிட்டன.

இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தை வளர்பிறை அணி தெரிவு செய்து இருபது ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து நூற்றி அறுபத்தேழு (167) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரேஞ்சர்ஸ் அணியினர் பதினெட்டு ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து நூற்றி முப்பெத்தெட்டு (138) ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தனர்.

வளர்பிறை அணியில் கூடுதல் ஓட்டங்களாக எம்.பௌசர் முப்பத்திநாலு ஓட்டங்களையும், எம்.எஸ்.அஸ்பாக் முப்பத்தொன்று ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ரேஞ்சர்ஸ் அணியின் தினேஷ் இரண்டு விக்கட்டினையும், ஏ.எல்.றிபாஸ் இரண்டு விக்கட்டினையும், எம்.றியாஸ் இரண்டு விக்கட்டினையும் கைப்பற்றியதுடன், ரேஞ்சர்ஸ் கழகத்தில் அதிகூடிய ஓட்டங்களாக தினேஷ் இருபத்திமூன்று ஓட்டங்களையும், ஏ.எல்.பைரூஸ் இருபத்தொன்பது ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழக தலைவரும் ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான யூ.எல்.அஹமட் தலைமையில் நடைபெற்ற இத் தொடர் நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா, ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலய அதிபர் எம்.ஏ.ஸாபிர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த சுற்றுத் தொடரில் வெற்றி பெற்ற வளர்பிறை அணிக்கும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ரேஞ்சர்ஸ் அணிக்கும், மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு அதிதிகளால் கிண்ணங்களும், பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. (கு)

Related posts

தபால் ரயில் சேவைகள் இரத்து

கதிர்

ஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு

G. Pragas

காச நோயால் ஆண்டுக்கு 400 பேர் மரணிப்பதாக தகவல்

Tharani

Leave a Comment