உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

லெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு! – பெருமளவானோர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (04) சற்றுமுன் இடம்பெற்ற அதிபயங்கர வெடிச் சம்பவத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதுடன் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லெபனான் – பெய்ரூட்டை கதிகலங்க வைத்துள்ள மிகப் பயங்கர வெடிப்பு. பெருமளவு மக்கள் படுகாயம். பலமைல்கள் தூரம் சேதம்.

Posted by Uthayan News on Tuesday, August 4, 2020

பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சிறிய வெடிப்பு ஏற்பட்டதை தொடர்த்து சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் பெரும் வெடிப்பாக இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் துறைமுகத்துக்கு அருகே இருந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரச செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இப்பாரிய வெடிச்சம்பவத்தால் தேசிய கோதுமை குழிகள் பாரிய அழிவை சந்தித்திருக்கும் என்றும், பல மைல்கள் தூரம் வரை இதனால் ஏற்பட்ட சேதகம் காணப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

பின்னிணைப்பு

சோடியம் நைட்ரேட் உள்ளிட்ட அதியுயர் வெடி பொருட்கள் சேமிக்கப்பட்ட கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே இப்பாரிய அனர்த்தத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் பேசிய பெய்ரூட் ஆளுநர், “சேதத்தின் அளவு மிகப் பெரியது. ஹிரோஷிமா நாஹசாகி போன்ற அழிவை ஒத்தது” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (26/12)

Bavan

708 மில்லியன் மோசடி; அறுவர் கைது!

Tharani

நிலவு செல்ல துணைவியை தேடும் ஜப்பான் செல்வந்தர்

Tharani