வங்கக்கடலில் உருவாகிறது அசானி புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் எதிர்வரும் 10ஆம் திகதி புயல் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version