செய்திகள்

வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

சிலாபத்தில் கடந்த அரசாங்கத்தின் தலையீட்டால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் வங்கி ஒன்றை அந்த வங்கியின் வைப்பாளர்கள் சிலர் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த வங்கி கடன்களை வழங்குவதாக தெரிவித்து வைப்பாளர்களிடம் பணம் வசூலித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

´பிரதீபாலோக்க கனிஸ்ட தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கூட்டுறவு சங்கம்´ என்ற பெயரில் சிலாபம் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த வங்கி இயங்கி வந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பொது மக்களுக்கு சலுகை வட்டிக்கமைய கடன்களை வழங்குவதை நோக்காக கொண்டே இந்த வங்கி ஆரம்பிக்கப்படுவதாக வங்கியின் பிரதானி வாடிக்கையாளர்களுக்கு கூறியுள்ளார்.

கடன் வழங்க இருபதாயிரம், பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் போன்ற பணத்தொகைகளை ஆரம்ப வைப்பாக வைப்பில் இடுமாறு வாடிக்கையாளர்களை அந்த வங்கி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கமைய புத்தளம் மாவட்டத்தில் சுமார் 400 வைப்பாளர்கள் தமது பணத்தை வைப்பில் இட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடன் தொகை வழங்கப்படாமையால் பிரதேச மக்கள் நேற்று (17) வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

அப்போதைய பிரதியமைச்சர் புத்திக பத்திரனவின் தலைமையில் இந்த வங்கி ஆரம்பிக்கப்பட்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரஷ்யாவில் இருந்து 261 மாணவர்கள் நாடு திரும்பினர்

கதிர்

துணுக்காய் இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட வேண்டும் – சுயன்சன்

G. Pragas

இரத்தினபுரியில் இருந்து 67 பேர் தனிமைப்படுத்தல்

reka sivalingam