கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

வடகிழக்கில் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்போம் – அமீர் அலி

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களியுங்கள் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதேசத்தில் தேர்தல் காரியாலயம் நேற்று இரவு திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, இணைப்பாளர் ஏ.அக்பர், வட்டாரக் குழு தலைவர் எம்.பாறூக் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் காரியாலயங்களை திறந்து வைக்கின்றார். (NK)

Related posts

இதுதான் தீர்வா; என்கவுண்டர் குறித்து கனிமொழி கேள்வி

reka sivalingam

புறக்கணிக்கப்பட்டாரா சஜித்- தொடரும் சர்ச்சை!

Tharani

இன்றைய நாள் ராசி பலன்கள்(13/12) – எப்படி?

Bavan

Leave a Comment