செய்திகள் பிரதான செய்தி மன்னார் யாழ்ப்பாணம் வவுனியா

வடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை

வடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.

அதற்கமைய, யாழ் பிரதேசத்தில் நாவற்குழி, கோகிலாக் கண்டி, தச்சன் தோப்பு, மறவன் புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, லிங் ரெடி மிக்ஸ் பிறைவேட் லிமிடெட் ஆகிய இடங்களிலும், வவுனியா பிரதேசத்தில் முகத்தாங்குளம், 2 ஆம் வட்டாரம், பகல அளுத்வத்த கிராமம், மதவுவைத்தகுளம் , குட்செட்வீதி, தோணிக்கல், பண்டாரிக்குளம், தவசிக்குளம், உக்குளாங்குளம் குளோப் மில் ஆகிய இடங்களிலும், மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளது.

மேலும் மன்னார் பிரதேசத்தில் இசைமழைத்தாழ்வு, நரிக்காடு, நிலாமடுவிலிருந்து சிலாவத்துறையூடாக அரிப்புவரை , கொக்குப்படையானிலிருந்து முள்ளிக்குளம் வரை, முள்ளிக்குளம் இராணுவ முகாம், ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மழை பெய்யும் சாத்தியம்

reka sivalingam

யாழில் சுயேட்சை குழு வேட்பு மனு தாக்கல்

reka sivalingam

அரசியலை தொடர விரும்பும் மைத்திரி

G. Pragas