கொரோனா தொற்றால் மன்னாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ள அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு உடல்நலக்குறை ஏற்பட்டதை அடுத்து நேற்றுமுன்தினம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனை கொண்டு செல்ல முன்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று அதன் முடிவுகள் வெளியாகியிருந்தன. உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்றுள்ளமை அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.