வடக்கு மாகாணத்தில் இன்று 32 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 25 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மன்னாரில் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.