செய்திகள்பிரதான செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

வடக்கில் காலாவதியான பைஸரே மாணவர்களுக்கு ஏற்றல்! – அதிர்ச்­சித் தக­வல்

வடக்கு மாகா­ணத்­தில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு காலா­வ­தி­யான பைஸர் தடுப்­பூ­சி­களே ஏற்­றப்­ப­டு­கின்­றன என்ற அதிர்ச்­சித்­த­க­வல் வெளி­யா­கி­யுள்­ளது. எனி­னும், சுகா­தார அமைச்­சின் தடுப்­பூசி தொடர்­பான ஆலோ­ச­னைக் குழு­வின் பரிந்துரையின் அடிப்­ப­டை­யி­லேயே தடுப்­பூசி ஏற்­றப்­ப­டு­கின்­றது என்று யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

தற்­போது வட­மா­கா­ணப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பைஸர் தடுப்­பூ­சி­கள் ஏற்­றப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இதன்­போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்­து­டன் காலா­வ­தி­யான தடுப்­பூ­சி­களே மாண­வர்­க­ளுக்கு ஏற்­றப்­ப­டு­கின்­றது என்று தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஆனால் காலா­வ­தி­யான இந்­தத் தடுப்­பூ­சி­களை 2022ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் வரை­யில் ஏற்­று­வ­தற்கு அதி­கா­ரி­க­ளால் அறி­வு­றுத்­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதற்­க­மைய கடந்த 13ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு இந்­தத் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது.

அடுத்த கட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு இந்­தத் தடுப்­பூ­சி­கள் ஏற்­றப்­ப­ட­வுள்­ளன என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது. வடக்­கின் ஏனைய பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கும் இந்­தத் தடுப்­பூ­சி­களே ஏற்­றப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்­பாக மாண­வர்­க­ளுக்கோ, பெற்­றோர்­க­ளுக்கோ சுகா­தா­ரத் துறை­யால் எந்த விளக்­க­மும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ர­னி­டம் கேட்­ட­போது,

‘இந்­தத் தடுப்­பூ­சியே நாடு முழு­வ­தும் ஏற்­றப்­ப­டு­கின்­றது .

உலக சுகா­தார நிறு­வ­னம் மற்­றும் சுகா­தார அமைச்­சின் தடுப்­பூசி தொடர்­பான ஆலோ­ச­னைக் குழு­வின் பரிந்­து­ரை­யு­ட­னேயே காலா­வ­தி­யான தடுப்­பூ­சியை பயன்­ப­டுத்­தும் சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ளது. அதில் தடுப்­பூ­சி­களை 2022 ஒக்­ரோ­பர் 31 ஆம் திக­தி­வரை பாவ­னைக்­குட்­ப­டுத்­த­லாம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

காலா­வ­தி­யாகி சில மாதங்­கள் கடந்த பின்­ன­ரான தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­ப­டு­வ­தால் மாண­வர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டதா?’ என்று அவ­ரி­டம் கேட்­ட­போது, ’நாடு முழு­வ­தும் இந்­தத் தடுப்­பூ­சியே செலுத்­தப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பான மேல­திக விவ­ரங்­களை நீங்­கள் சுகா­தார அமைச்­சி­டம் தான் கேட்க வேண்­டும் ’என்று அவர் மழுப்­ப­லா­கப் பதி­ல­ளித்­தார்.

அதே­வேளை, ஏனைய மாகா­ணங்­க­ளில் சில­வற்­றில் இந்­தத் தடுப்­பூசி ஏற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­போ­தும், அதி­கா­ரி­க­ளின் எதிர்ப்­பால் அந்த நட­வ­டிக்கை கைவி­டப்­பட்­டது என்று அறிய முடி­கின்­றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282