செய்திகள் பிரதான செய்தி

வடக்கில் நாளை மின்வெட்டு!

வடக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை(15) மின் தடை ஏற்படும் என சுன்னாகம் இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் மின்பொறியியலாளர் அனுசா செல்வராசா தெரிவித்துள்ளார்.

நாளை(15) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் தடைப்பட உள்ள இடங்களாக

யாழ் பிரதேசத்தில், விக்றோரியா வீதி, மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டுக்கோபுர வீதி, பஸார் வீதி, ஞானம்ஸ் விடுதி, ஹற்றன் நசனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், கமலேஸ்வரி, சிவராஜா புடவையகம், டொபாஸ், அன்னை நாகா பூட் சிற்றி, எல்.ஓ.எல்.சி , யாழ் போதனா வைத்தியசாலை அதி அவசரப் பிரிவு, ஆஸ்பத்திரி வீதியில் கஸ்தூரியார் சந்தி வீதியிலிருந்து காரைநகர் சந்தி வரை, கே.கே.எஸ் சத்திரச் சந்தியில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கு வரை, யாழ் 1ம்,2ம்,3ம்,4ம் குறுக்கு தெருக்கள், வடமகாண ஊழியர் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, சிறீலங்கா டெலிகொம், யாழ் பொது நூலகம், யாழ் பொலிஸ் நிலையம், யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி, எஸ்.ரி.எஸ் வைத்தியசாலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.

மேலும் வவுனியா பிரதேசத்தில், வவுனியா நகரத்திலிருந்து (கண்டி வீதி) பூ ஓயா வரை, மதவு வைத்த குளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை, gowloom garments, ஈரப்பெரிய குளம் இராணுவ முகாம், slbc, ஈரப்பெரிய குளம் யோசப் படை முகாம், மூன்று முறிப்பு இராணுவ முகாம், air point joint service army camp, பூ ஓயா இராணுவ முகாம், recbo north ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts

மரண தண்டனை கைதிக்கு ஏன் மன்னிப்பு – சிறிசேன விளக்கம்

G. Pragas

தமிழ் தேசிய கட்சிகள் இடையிலான கலந்துரையாடல்; இணக்கமில்லை!

G. Pragas

கடும் காற்றால் பாடசாலை சேதம்!

G. Pragas