in ,

வடக்கில் 55 பேருக்குத் தொற்று – முல்லைத்தீவில் எகிறுகிறது எண்ணிக்கை!!

வடக்கு மாகாணத்தில் இன்று (16) புதிதாக 55 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு மருத்துவமனையில் 8 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும் என 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வளாக மாணவர்கள் 31 பேருக்கு ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைப்போன்று பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மருத்துவமனையில் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், பூவரசங்குளம் மருத்துவமனையில் 6 பேருக்கும், மன்னார் மருத்துவமனையில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதிய கட்டுபாடுகள் |அரசின் திடீர் அறிவிப்பு |கர்ப்பிணிகள் சாவு| நடப்பது என்ன?| Uthayan TV|16.05.2021
🛑 https://www.youtube.com/watch?v=iHJu91kauHA
❤️ Subscribe us: https://bit.ly/2QOJTcB​

சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு

ஆயிரத்தை நெருங்கும் இறப்புக்கள்! – இலங்கையில் 3ஆம் அலை தீவிரம்!!