in ,

வடக்கு, கிழக்கில் 18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்கள் வாக்காளர் இடாப்பில் பதியவும்

வடக்கு கிழக்கிலுள்ள 18, வயதை பூர்த்தி செய்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிவு செய்து எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

தற்போது 2021 ஆம் ஆண்டுக்காக வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவலினால் வீடு வீடாகச் சென்று இம்முறை படிவங்கள் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, 2020, ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்களை சரிபார்த்து புதிதாக 18, வயதை பூர்த்திசெய்த அனைவரும் தமது அடையாள அட்டைகளை காட்டி பிறந்த திகதியை குறிப்பிட்டு வாக்காளராக பதியும்படி வேண்டுகின்றோம்.

2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் 2021/ER படிவத்தினை பூர்த்தி செய்து சாதாரணமாக வதிகின்ற பிரிவு கிராம சேவையாளரிடம் கையளித்து பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது பற்றிய விடயங்கள் சாதாரண மக்களுக்கு சென்றடைவதற்கு ஏற்ற வழிவகைகளை விடயம் தெரிந்தவர்கள் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

2021 ஜூன் 1 ஆம் திகதிக்கு முன் 18 வயது பூர்த்தியடைந்தவர்களையும், 2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் தமது பெயரை பதியத் தவறியவர்களையும் இவ்விடயத்தை தெரியப்படுத்தி வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்ய ஊக்குவிப்பதும் அவசியமாகியுள்ளது. இவ்வாறு பதிவு செய்பவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பதென்பது அவரவர் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் 40 மெற்றிக்தொன் கொம்போஸ்ட் பசளை தயாரிப்பு

கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கத்திக்குத்து