செய்திகள் வவுனியா

வடக்கை அழகுபடுத்த புதுத் திட்டம் – கேணல் ரட்ணபிரிய

வடக்கு மாகாணத்தை அழகுபடுத்தி முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சமூக பாதுகாப்பு பிரிவின் வட மாகாண இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

வடக்கினை அழகுபடுத்துவதற்கு பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக சித்திரங்கள் வரைகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த சித்திரங்களானது அந்தந்த பகுதியினை பிரதிபலிக்கின்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகவே அமையும். ஆகவே வீணான போலி பிரசாரங்களை செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்திற்கான அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் – என்றார்.

Related posts

யாழ்ப்பாண விமான நிலையப்பணிகள் முடங்கிய நிலையில்!

reka sivalingam

யார் இந்த பில்லா,ரங்கா ?

Bavan

உயிரியல் பிரிவில் யாழ் இந்து மாணவன் சாதனை

Bavan

Leave a Comment