செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்

வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று (18) மாலை முதல் காணாமல் போன மூன்று சிறுவர்கள் இன்று (19) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பத்து வயதுடைய இரண்டு சிறுவர்களும் மற்றும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் நேற்று மாலை வேளையில் இருந்து காணாமல்ப் போயுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் மாலை ஆகியும் வீட்டுக்கு வராததால் ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காத்தை அடுத்து, பருத்தித்துறைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிசாரும் அப்பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கலியுகமூர்த்தி மதுசன் (10), புஸ்பகுமார் செல்வகுமார் (10), சந்தியோ தனுசன் (17) ஆகிய மூவரே இவ்வாறு காணாமல் போன நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் இன்று காலை கோவில் மடத்துக்குள் உறங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

பெருந்தோட்டங்களை சீனாவுக்கு தாரைவார்க்க போகின்றனரா?

G. Pragas

சவேந்திரவின் தடையை வரவேற்றார் விக்கி

G. Pragas

சரவணபவன் மற்றும் இருவருக்கு நீதிமன்றத் தடை!

G. Pragas