கிளிநொச்சிசெய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்களின் நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் மற்றும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் வடக்கில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலக வளாகத்திலும் நவம்பர் 1 ஆம் திகதி கிளிநெச்சி மாவட்ட திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்திலும் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தோர் இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையில் பங்குபற்றி பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்ற பிரிவு, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணாமற்போன ஆள்கள் பற்றிய அலுவலக என்பன சேவைகளை வழங்கவுள்ளன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282