தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்வவுனியா

வடமாகாண ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தம்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்துக்கான புகைரத சேவைகள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படும்.

இந்தியாவின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வடக்கு மக்களுக்கு சிறந்த ரயில் சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமையவே புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

அரச ஊழியர்களின் நலன் கருதி காங்கேசன்துறைக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை அதேவேளை வடக்குக்கான இரவு நேர சொகுசு ரயில் சேவைகளும் நடைமுறையில் உள்ளன – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214