in ,

வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் போராட்டம்

வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் வெளிகள உத்தியோகத்தர் ஒருவரை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவர் தாக்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இன்று போராட்டம் ஒன்றை வட்டகொடை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர்.

கைகளில் கறுப்பு பட்டி அணிந்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர்.

இதன்போது உத்தியோகத்தரை தாக்கிய தொழிலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டகாரர்கள் வலியுறுத்தினர்.

பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக செயல்படுத்தல் வேண்டும்

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராய்வு