கிழக்கு மாகாணம் செய்திகள்

வட்டியில்லாக் கடன் வழங்கல்

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி வங்கியினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவுவிலுள்ள சமுர்த்தி பெறும் மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சகிதம் கலந்து கொண்டு நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 5112 சமுர்த்தி பயனாளிகள் உள்ள நிலையில் “சஹன பியவர” சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத் திட்டத்திற்கமைய ஐயாயிரம் ரூபாய் வீதம் சனிக்கிழமை வரை 3351 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

Related posts

விபத்தில் மூன்று மாணவிகள் உட்பட நால்வர் படுகாயம்!

G. Pragas

எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லத் தடை!

Tharani

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Bavan