செய்திகள்வணிகம்

வட்டி வீதங்களில் மாற்றம்; மத்திய வங்கி நடவடிக்கை!

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு  இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணயச் சபையில் நேற்று (08) இடம்பெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் 4 தசம் 5 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 5 தசம் 5 வீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியன தலா 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வீதங்கள் குறைவடைந்துள்ளன.

உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் பகுப்பாய்வு செய்துள்ள நிலையில்  இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தைக் கடன் விகிதங்களைக் குறைத்தல், இதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித்துறைகளுக்கான கடன் வழங்கலை ஊக்குவித்தல், கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் பணவீக்கத்தின் நிலைமைகளை பதிலீடு செய்தல் ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு, கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282