in , ,

வட்டுவாகலில் வெடி சம்பவம்; ஒருவர் பலி – ஒருவர் காயம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல், அக்கரைப் பகுதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரமோகன் நிஷாந்தன் (வயது-19), சம்பவத்தில் படுகாயமடைந்தவர் வட்டுவாகலை சேர்ந்த செல்வக்குமார் சயந்தரூபன் (வயது920) என்பவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இருவரும் நுங்கு வெட்டிவிட்டு குடிக்க சென்ற போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய வரவேற்பு பகுதி மூடல்!

யாழில் 7 கிலோ ஐஸ் கைப்பற்றல்; நால்வர் கைது!