வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், கிளிநொச்சி மக்களுக்காக மாகாணசபையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்த ஒருவராவார்.
ஓய்வுபெற்ற கிராம அலுவலரான இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல் ரீதியில் பெரும் பங்களிப்பையும் வழங்கியிருந்தார்.
உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகசபைத் தலைவராக இருந்த இவர், ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய அகழ்வாராய்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பௌத்த ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.