கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக, பலர் வருமானமற்று காணப்படுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 480 ஆசிரியர்கள், கிளிநொச்சியில் 431 ஆசிரியர்கள், முல்லைத்தீவில் 525 ஆசிரியர்கள், மன்னாரில் 454 ஆசிரியர்கள் மற்றும் வவுனியாவில் 310 ஆசிரியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனாவை தடுக்க அரசின் நடவடிக்கை குறித்து – ரணில் அறிக்கை

Tharani

வடக்கு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…!

Tharani

கடற்படை காவலில் 52 பேர்; ஒலுவிலுக்கு அனுப்ப நடவடிக்கை!

G. Pragas