செய்திகள்

சமகால சவால்கள் என்ற தொனிப்பொருளில் 2வது மாநாடு

அடிப்படைவாத வன்முறைக்கு எதிராகுதல் (Countering Violent Extremism) என்ற தலைப்பில் 2வது மகாநாடு புத்தலவில் உள்ள அதிகாரிகள் தொழில் மேம்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று (20) ஆரம்பமானது.

நாடு முழுவதிலும் உள்ள இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு நிபுனர்கள் புத்திஜீவிகள் மற்றும் வள பங்களிப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இது ஆரம்பமானது. 

வன்முறை அடிப்படை வாதத்திற்கு எதிராகுதல் (Countering Violent Extremism) சமகால நிலை மற்றும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 14 வது முறையாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மகாநாட்டிற்காக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் நிர்மான் தர்மரத்ன கலந்து கொண்டார்.

இந்த மத்திய நிலையத்தின் படை நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இந்த மகாநாட்டின் நோக்கம் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையான விடயங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தைப் போன்று தேசிய மற்றும் வெளிநாட்டு மட்டத்தில் உலகில் பல்வேறு வடிவங்களில் அடிப்படை வாத அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. முக்கிய உரையை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் தர்மரத்ன தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகளை சரியான முறையில் தொலை நோக்குடன் தீர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய பொதுவான விடயங்களை மீளாய்வு செய்தல் குறித்த விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலமர்வில் உரைகளை நிகழ்த்துவதற்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அமல் ஜயவர்தன, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மேயர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, திருமதி மணிஷா, எஸ். வணசிங்க பெஸ்குவல் மற்றும் கலாநிதி ஷமில தளகல ஆகியோர் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

thumbnail 4

Related posts

சுற்றிவளைக்கப்பட்ட வீடு! 11 பேர் கைது!

கதிர்

ஹட்டன் நகர சபையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை!

Tharani

முகத்திரைகளுக்கான வரி நீக்கம்!

G. Pragas