செய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு

வயற்காணிகளை துப்பரவு செய்வதை தடுத்த இராணுவம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும் நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் சுத்தம் செய்யும்போது குறித்த செயற்பாட்டை இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

நேற்று (02) இடம்பெற்ற இராணுவத்தினுடைய இந்த அடாவடிச் செயற்பாட்டினை, விவசாயிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது விவசாயிகளிடம் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இருப்பின், அனுமதிப் பத்திரங்களின் பிரதிகளை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு குறித்த காணிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர் என்று அறியமுடிகிறது.

Related posts

அவுஸ்திரேலியாவில் சூறாவளி – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

reka sivalingam

இந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது

G. Pragas

கொழும்பு செல்லும் வாகனச்சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

reka sivalingam