in

வரலாற்றில் இன்று: டிசம்பர் 22

1790 – துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.

1807 – வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

1849 – ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1915 – மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1937 – லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1963 – லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1989 – கிழக்கு ஜேர்மனியையும் மேற்கு ஜேர்மனியையும் பேர்லினில் பிரித்த “பிராண்டன்பேர்க் கதவு” 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 – மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.

யாழ் பல்கலை பழைய மாணவர் சங்கம் மீள ஆரம்பம்

சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்து பண்ணையில் ஆர்ப்பாட்டம்