செய்திகள் வரலாற்றுப் பதிவுகள்

வரலாற்றில் இன்று – (05.07.2020)

நிகழ்வுகள்

 • 1295 – இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கின.
 • 1594 – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்
 • 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
 • 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
 • 1770 – ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
 • 1811 – வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 • 1830 – பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது.
 • 1865 – இரட்சணிய சேனை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1884 – ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித்தது.
 • 1900 – அவுஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
 • 1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
 • 1950 – சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.
 • 1951 – சந்தி திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்.
 • 1954 – பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
 • 1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
 • 1962 – பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
 • 1970 – கனடிய விமானம் ஒன்று டொரொண்டோ விமான நிலையத்தில் மோதியதில் 109 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1971 – ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
 • 1975 – போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வேர்ட் விடுதலை பெற்றது.
 • 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
 • 1987 – விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
 • 1992 – இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 • 1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
 • 1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
 • 2004 – இந்தோனீசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.
 • 2006 – வட கொரியா குறைந்தது இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும் ஏவுகணையையும் சோதித்தது.
 • 2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.
 • 2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்ற் சாதனை புரிந்தார்.

பிறப்புகள்

 • 1653 – தாமஸ் பிட், மதராசின் பிரித்தானிய ஆளுநர் (இ. 1726)
 • 1904 – எர்ணஸ்ட் மாயர், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
 • 1918 – கே. கருணாகரன், இந்திய அரசியல்வாதி (இ. 2010)
 • 1954 – ஜான் ரைட், நியூசிலாந்து துடுப்பாட்ட வீர்ரர்
 • 1958 – பில் வாட்டர்சன், அமெரிக்கக் கேலிச்சித்திரக்காரர்
 • 1996 – டோலி, முதல் குளோனிங் பாலூட்டி (இ. 2003)

இறப்புகள்

 • 1833 – யோசெப் நிசிபோர் நியெப்சு, பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
 • 1987 – கப்டன் மில்லர், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
 • 2006 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (பி. 1924)

சிறப்பு நாள்

 • வெனிசுவேலா – விடுதலை நாள் (1811)
 • அல்ஜீரியா – விடுதலை நாள் (1962)
 • கேப் வேர்ட் – விடுதலை நாள் (1975).
 • ஆர்மீனியா – அரசியலமைப்பு நாள் (1995)
 • தமிழீழம் – கரும்புலிகள் நாள்

Related posts

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Tharani

வவுனியாவில் சுனாமி ஆத்ம சந்தி பிராத்தனை

G. Pragas

யாழ் வரும் சாரதிகளுக்கு கொரோனா பரிசோதனை!

G. Pragas