செய்திகள் வரலாற்றுப் பதிவுகள்

வரலாற்றில் இன்று- (10.04.2020)

நிகழ்வுகள்

  • 1658 – ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
  • 1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
  • 1741 – புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
  • 1790 – ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
  • 1815 – இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1821 – கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
  • 1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
  • 1848 – இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.
  • 1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.
  • 1869 – கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.
  • 1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
  • 1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1963 – ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.
  • 1972 – வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
  • 1979 – டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 1991 – இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
  • 1998 – அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.
  • 2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1870 (பழைய முறை) – விளாடிமிர் லெனின் (இ. 1924)
  • 1887 – பெர்னாடோ ஹொசே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)
  • 1898 – ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர் (இ. 1878)
  • 1917 – ரொபேர்ட் வூட்வார்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1979)
  • 1918 – ஜோர்ன் அட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்தவர் (இ. 2008)
  • 1927 – மார்ஷல் நிரென்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

  • 1585 – பாப்பரசர் 13வது கிரெகரி, பி. 1502)
  • 1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் நாட்டவர் (பி. 1617)
  • 1931 – கலீல் ஜிப்ரான், லெபனான் கவிஞர், ஓவியர் (பி. 1883)
  • 1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896)
  • 2012 – என்.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்
  • 2015 – ரிச்சி பெனோட், அவுஸ்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (பி. 1930)

Related posts

காட்டிக்கொடுப்பதை நடை பிணம் கருணா கைவிட வேண்டும்!

G. Pragas

ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதி என கூறுவதை சரி என்பார்களா?

G. Pragas

சம்பிக்கவின் சாரதி மனைவி உரிமை மனு தாக்கல் செய்தார்.

reka sivalingam