செய்திகள் வரலாற்றுப் பதிவுகள்

வரலாற்றில் இன்று- (13.03.2020)

-நிகழ்வுகள்

 • 1639 – ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
 • 1781 – வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
 • 1811 – பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
 • 1881 – ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
 • 1900 – பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
 • 1908 – நெல்லை க்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.
 • 1921 – மொங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
 • 1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
 • 1943 – ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
 • 1954 – வியட்நாம் போர்: வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
 • 1957 – கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
 • 1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
 • 1979 – கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 • 1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 • 1996 – ஸ்கொட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
 • 1997 – அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.
 • 2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
 • 2007 – 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.

-பிறப்புக்கள்

 • 1733 – ஜோசப் பிரீஸ்ட்லி, ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் (இ. 1804)
 • 1839 – ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
 • 1843 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)

-இறப்புக்கள்

 • 1936 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (பி. 1876)
 • 1975 – ஐவோ ஆண்டிரிக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)

Related posts

மஹகந்த வனப்பகுதியில் தொடரும் தீ!

reka sivalingam

டெஸ்போட் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

G. Pragas

50,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு; அமைச்சரவை அனுமதி

reka sivalingam

Leave a Comment