உலகச் செய்திகள் செய்திகள்

வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர் – ட்ரம்ப் சீற்றம்!

இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க துடிக்கின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க பொலிஸாரால் படுகாெலை செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ட்ரம்ப் பேசினார். இதன்பாேது,

“அண்மைக்காலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன. இந்த போராட்டங்களில், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்காவை நிறுவிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.பள்ளிகளில், நம் குழந்தைகளுக்கு நம் கலாசாரத்துக்கு எதிரான விடயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.

நாட்டின் பல நகரங்களில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளை நிகழ்த்துகின்றனர். நம் நாட்டை நிறுவிய, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிய தலைவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்” – என்றார்.

Related posts

விஸ்வாசம் பாடலாசிரியர் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

Tharani

மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் முதலியோரும் தமது வாக்குகளை பதிவு செய்தனர்..

Bavan

பாடசாலைகள் ஆரம்பமாக முன்னர் டெங்கு ஒழிப்பு

Tharani